• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
- இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு 900 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் கீழ் நிருமாணிப்பு மேற்பார்வை, ஒப்பந்த முகாமைத்துவம் அடங்கலாக ஊவா மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மதியுரைச் சேவை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கொரியாவின் Pyunghwa Engineering Consultants நிறுவனமும் இலங்கையின் Consulting Engineers and Architects Associated (Pvt) கம்பனியும் இணைந்து தாபித்துள்ள கூட்டுத்தொழில் முயற்சிக்கு 1,154.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.