• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கனிம மணல் நிறுவனத்தின் கனிம மணல் விற்பனை
- கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் இலங்கை கனிம மணல் நிறுவனம் பிரதானமாக இல்மனைட், ரூட்டைல், சேர்கோன் மற்றும் ஹைடைய் இல்மனைட் அகழ்வு செய்யும், பிரித்தெடுக்கும் மற்றும் விற்பனை செய்யும் அரசாங்க கம்பனி ஒன்றாகும். இந்த கம்பனியினால் 25,000 மெற்றிக் தொன் இல்மனைட் விற்பனை செய்வதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மெற்றிக் தொன் ஒன்று 145.25 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் துபாயில் உள்ள Rescom Mineral Trading FZE கம்பனிக்கு இந்த இல்மனைட் தொகையை விற்பனை செய்யும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.