• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செலவு மதிப்பீட்டு மீளாய்வுக் குழுவினைத் தாபித்தல்
- அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்குரிய ஒப்பந்தங்களை வழங்கும் போது அவற்றில் பெரும்பாலானவை பொறியியல் மதிப்பீடுகளை விட கூடுதலான தொகைக்கு ஒப்பந்தங்களை வழங்கும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவற்றின் செலவு அதிகரிப்பதும் அடிக்கடி நிகழுகின்றமை அறியவந்துள்ளது. இந்த நிலைமையை சீர்செய்வதற்கு உரிய பொறிமுறையொன்றை அறிமுப்படுத்துவதும் செயல்திறன் மிக்க செலவு மதிப்பீட்டினை தயாரிப்பதற்கு கொள்வனவு நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதும் காலத்தின் தேவையென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்டகொள்வனவுக் குழுக்களின் அதிகாரத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களின் மொத்த செலவு மதிப்பீட்டினதும் ஒப்பந்த செலவினதும் மாற்றங்களை மீளாய்வு செய்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் உரிய உத்தியோகத்தர்களைக் கொண்ட செலவு மதிப்பீட்டு மீளாய்வு குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.