• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
160 பயணிகள் புகையிரத பெட்டிகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை புகையிரத திணைக்களத்தினால் வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்து சேவையினை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 160 பயணிகள் புகையிரத பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினால் சிபாரிசுசெய்யப்பட்டுள்ளவாறு 82.63 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s. RITES Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.