• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வருமானம் பெறும் 150,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குதல்
- சமுர்த்தி நிவாரண நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுமார் 1.38 மில்லியன் குடும்பங்களுக்கு நலன்கள் வழங்கப்படுகின்றன. ஆயினும் இந்த நிவாரணம் கிடைக்கப்பெறுவதற்கு பொருத்தமானவர்களென இனங்காணப்பட்டுள்ள தற்போது சமுர்த்தி நலன்கள் கிடைக்கப்பெறாத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பல குடும்பங்களுக்கும் இந்த நலன்கள் கிடைக்கப்பெறாமை அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உரிய பிரதேசங்களின் மாவட்ட செயலாளர்களினதும் பிரதேச செயலாளர்களினதும் சிபாரிசுகளுடன் சமுர்த்தி நிவாரணம் கிடைக்க வேண்டிய மேலும் குறைந்த வருமானம் பெறும் 150,000 குடும்பங்கள் சார்பில் இந்த நிவாரணத்தை விரிவுபடுத்தும் பொருட்டு சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.