• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெல அவரகொட்டுவ மீள் குடியமர்த்தும் கருத்திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்படுபவர்களுக்கு உரித்து உறுதிகளை வழங்குதல்
- 1994 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முத்துராஜவெல அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் முத்துராஜவெல சதுப்புநில பிரதேசத்தில் குடியிருந்த சட்டவிரோத குடியிருப்பாளர்கள் இந்த பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர் இதே பிரதேசத்தின் ஒரு பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த காணிகளில் குடியிருப்பவர்களுக்கு உரித்து உறுதிகளை வழங்குவதற்கு உரியதாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு உரித்து உறுதிகளை வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.