• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத எஞ்சின்களை கொள்வனவு செய்வதற்கு நிதிப் பெற்றுக் கொள்ளல்
- மலையக புகையிரத பாதை போக்குவரத்துசேவையை விருத்தி செய்யும் நோக்கில் 12 புகையிரத எஞ்சின்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான 48.67 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையானது கனடா ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனத்தின் ஒத்துழைப்பின் மீது Standard Chartered வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு உரிய பணிகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.