• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையின் பாவனைக்காக கட்டடங்களை நிருமாணித்தல்
- புத்தளம், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பொறியியலாளர்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய 08 வீட்டு கட்டடத் தொகுதியையும் 24 அறைகளுடன்கூடிய விடுதிக் கட்டடமொன்றையும் நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் M/s George Stuart Engineering (PVT) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.