• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக கொள்கலன்களைக் காவிச் செல்லும் வண்டிகள் (Container Wagons) மற்றும் கொள்கலன் பெட்டிகளை (Container Boxes) கொள்வனவு செய்தல்
- நகர திண்மக் கழிவுகளை பாதுகாப்பாக இடும் இடமொன்றை புத்தளம் அறுவக்காலு பிரதேசத்தில் நிருமாணிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள நகர பிரதேசங்களில் ஒன்று சேரும் நகர திண்மக் கழிவுகளை அறுவக்காலு பிரதேசம் வரை கொண்டு செல்வதற்காக 34 கொள்கலன்களைக் காவிச் செல்லும் வண்டிகளையும் 94 கொள்கலன் பெட்டிகளையும் கொள்வனவு செய்யும் பொருட்டு கேள்வி நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.