• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ சோதனை கையுறைகளை கொள்வனவு செய்தல்
- மருத்துவ சோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் இறப்பர் பாலினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொற்றுநீக்கப்படாத 79,430,000 மருத்துவ பரிசோதனை கையுறைகளை (பல்வேறுபட்ட அளவுகளில்) கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 448.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Sisili Project Consortium (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.