• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நேரசூசிகைக்கு அமைவாக பயணிகள் சேவையை மேற்கொள்வதற்கு 7,257 பேருந்துகள் தேவைப்பட்ட போதிலும் பேரூந்துகளின் பற்றாக்குறை காரணமாக தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது 6,000 பேருந்துகள் மாத்திரமாகும். தற்போதுள்ள பேரூந்து சேர்மத்தில் 1,560 பேரூந்துகள் 15 வருடத்திற்கு மேலாக பழமை வாய்ந்தவையோடு இவை அடிக்கடி தொழினுட்ப கோளாறுகளுக்கு உள்ளாகின்றதன் காரணமாக பயணிகளின் தேவைகளை உரிய வகையில் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இயலாமற் போயுள்ளது. பேரூந்துகள் உரிய ஆயுட்காலத்தை விஞ்சி மற்றும் விபத்துக்களுக்கு உட்பட்டுள்ளமை என்பதன் காரணமாக வருடாந்தம் 500 பேரூந்து வரை பாவனையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிவரும். இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நகர பயணிகள் சேவை சார்பில் பயன்படுத்துவதற்கு 50-54 உயர் பின் ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பேரூந்துகளையும் 32-35 ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பேரூந்துகளையும் கொள்வனவு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.