• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தொழிலணியை பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக்குவதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- தொழிற் திணைக்களத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரை ஊழியர்களின் சேவை நிபந்தனைகள், சமூகப் பாதுகாப்பு, தொழில் நலவியல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான 61 சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதில் சுமார் 27 சட்டங்கள் ஏற்கனவே நடைமுறை ரீதியில் செயற்பட்டு வருகின்றன. இந்த சட்டங்களில் காட்டப்பட்டுள்ள சில சேவை நிபந்தனைகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றமையினால் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது முகங்கொடுப்பதற்கு நேருகின்ற பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்குடன் தற்பேது நிலவும் ஊழியர் உரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவாறு தொழிலுக்கு அமர்த்தல் பற்றிய விடயங்களுக்கு உரியதாக தனியான சட்டமொன்றை தயாரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கியமாக தற்போது பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்காத தொழிலணியை இதில் பங்குபெறச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் நெகிழ்ச்சிகரமான சேவை நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக, ஏற்கனவே ஆக்கப்பட்டுள்ள தொழல் சட்டங்களின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள தொழிலாளர் உரிமைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத விதத்தில் கடைகள் மற்றும் அலுவலக ஊழியர் சட்டம், சம்பள கட்டுப்பாட்டு சபை கட்டளைச் சட்டம், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்துதல் பற்றிய சட்டம், பெண்களை தொழிலுக்கு அமர்த்துதல் கட்டளைச் சட்டம் ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக தொழிலுக்கு அமர்த்துதல் பற்றிய புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.