• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இணைய பாதுகாப்பு, e-அரசாங்க செயற்பாடுகளின் டிஜிட்டல் சேவை மற்றும் அத்தியாவசிய தொடர்பாடல் முறைகள் உள்ளடக்கப்பட்ட இணைய இணைப்புகள் ஆகிய துறைகள் விசேடமாக தழுவப்படும் விதத்தில் டிஜிட்டல் மயமாக்கல் துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை 2018 யூன் மாதம் 10-13 வரை பின்லாந்தின் பொருளாதார அலுவல்கள் மற்றும் தொழில் பற்றிய பிரதி அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.