• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கணனியை பயன்படுத்தி கற்பித்தலுக்கான e-கற்றல் வளங்களை உருவாக்குவதற்கான தேசிய நிலையமொன்றைத் தாபித்தல்
- இலங்கை பாடசாலைகளில் தகவல் தொழினுட்பக் கல்வி மற்றும் கல்விக்கான தகவல் தொழினுட்ப பாவனை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான கருத்திட்டப் பிரேரிப்பொன்று கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, உத்தேச கருத்திட்டத்தின் மூலம் சகல வலய கணனி வளநிலையங்களுக்கு கணனிகளையும் உதிரிப்பாகங்களையும் வழங்குவதற்கும், நில்வளா கல்விக் கல்லூரி மற்றும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி ஆகியவற்றில் மாகாண மட்ட தகவல் தொழினுட்ப கல்வி நிலையங்கள் இரண்டினை நிருமாணிப்பதற்கும் குளியாபிட்டிய, நாரங்கல்லவத்த காணியில் தேசிய மட்டத்திலான மென்பொருள் மற்றும் கணனி பிரயோக நிலையமொன்றைத் தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொரிய ஏற்றுமதி, இறக்குமதி வங்கி ஊடாக பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நிதியம் மற்றும் அபுதாபி நிதியம் என்பவற்றின் ஊடாக 56.9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உரியதான பணிகளை செய்யும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.