• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை தடை செய்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் அழிவு சம்பந்தமான சமவாயத்தில் (ஒட்டாவா சமவாயம்) இலங்கையின் அணுகுகை
- மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை தடை செய்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் அழிவு சம்பந்தமான சமவாயத்தில் (ஒட்டாவா சமவாயம்) சேர்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு இயலுமாக்கும் சட்டமூலங்களை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.