• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பொலன்நறுவை மீள் எழுச்சி” நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக மத்திய கலாசார நிதியத்தின் பொலன்நறுவை கருத்திட்ட அலுவலக கட்டடமும் இந்த மனையிடத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளும்
- "பொலன்நறுவை மீள் எழுச்சி” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்நறுவை புண்ணிய நகரம் சார்ந்த வலயத்தினை மரபுரிமை நகரமொன்றாக அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மத்திய கலாசார நிதியத்தின் பொலன்நறுவை கருத்திட்டத்தின் அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ள 19 ஆம் நூற்றாண்டிற்குரிய கட்டடத்தை அதன் கலாசார அடையாளத்தை பாதுகாக்கும் விதத்தில் புனரமைத்து உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் கலாசார மரபுரிமைகள் முகாமைத்துவ கையாள்கை நிலையமொன்று தொல்பொருளியல் தகவல் நிலையம், உள்நாட்டு உணவு உட்பட உள்நாட்டு கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளின் விற்பனை மற்றும் கண்காட்சி நிலையம் ஆக அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைவாக இந்த அலுவலகத்திற்கு முன்பாக செல்லும் கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியை அபிவிருத்தி செய்தமையினால் அப்புறப் படுத்தப்பட வேண்டி ஏற்பட்ட விற்பனை நிலையங்களை மீள நிருவுவதற்காக 22 சிறிய விற்பனை நிலையங்களைக் கொண்ட இரண்டு மாடி வர்த்தக கட்டடத் தொகுதியொன்றை இந்த மனையிடத்தினுள் துரிதமாக நிருமாணிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.