• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாய பாடமொன்றாக அறிமுகப்படுத்துதல்
– இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களின் சமார் 75 சதவீதம் தொற்றா நோய் காரணமாக நிகழ்கின்றமை புதிய தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், மொத்த சனத்தொகையின் சுமார் 72.5 சதவீதமானோர் மரக்கறி மற்றும் பழங்கள் தேவையான அளவு உட்கொள்ளவில்லை என்பதும் சுமார் 44 சதவீதமான பெண்கள் போதுமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடாமை தெரியவந்துள்ளது. இந்த நிலைமையினை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையொன்றை பின்பற்றுவதற்கு சுகாதாரம் தொடர்பில் சிறந்த அறிவு இருப்பது அத்தியாவசியமானதாகும். ஆயினும் நடைமுறையிலுள்ள பாடசாலை பாட சிபாரிசுகளில் ஆறாம் வருடத்திலிருந்து ஒன்பதாம் வருடத்திற்கு மாத்திரம் "சுகாதாரம்" கட்டாய பாடமொன்றாக கற்பிக்கப்படுவதோடு, க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சைக்கு இந்த பாடமானது கட்டாய பாடமொன்றல்ல.

இதற்கமைவாக க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் கட்டாய பாடமொன்றாக சுகாதார பாடத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பும் 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்த பாடசாலை பாடத்திட்டத்திற்கான திருத்தத்தின் போது க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சை வரை சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்னும் பாடத்தை கட்டாய பாடமொன்றாக பாடசாலைகளில் கற்பிக்க வேண்டுமென கல்வி சீர்திருத்த நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேரிப்பையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பாடசாலை பாடத்திட்டங்களின் திருத்தம் தொடர்பிலான கொள்கை தீர்மானமெடுக்கும் அதிகாரத்தினை கொண்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த பிரேரிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.