• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குதல்
– தற்போது இலங்கையில் நோய் காரணமாக நிகழும் மரணங்களுக்கு காரணமாக உள்ள புற்றுநோய் இரண்டாவது பிரதான காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழினுட்பத்துடன் கூடிய வசதிகள் இலங்கையில் இல்லாமையினால் பொருளாதார ரீதியில் ஆற்றலுள்ள நோயாளிகள் வௌிநாட்டு சிகிச்சை நிலையங்களுக்குச் செல்லும் போக்கினை காட்டுகின்றது. புற்றுநோய் முன்னதாகவே இனங்காணப்படமுடியுமாயின் சிகிச்சை மூலம் மூன்றிலொரு பங்கு நோயாளிகளைவிட கூடுதலானவர்களின் நோய் அதிகரிப்பினை தடுக்க முடியுமானாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளை சேர்ந்த சுமார் 70 சதவீதமான நோயாளிகள் நோய் நிலைமையானது இனங்காணப்படுவது நோய் பெருமளவு அதிகரித்ததன் பின்னர் என்பதனால் புற்றுநோய் காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நோய் முன்னதாகவே கண்டறிவதற்கும் நோயை நிர்ணயிப்பதற்குமாக மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 3 Tesla MRI Scan இயந்திரங்கள் கண்டி போதனா வைத்தியசாலைக்கு Gamma Knife Package மற்றும் PET/CT. இயந்திரமொன்றையும் கொள்வனவு செய்து பொருத்தும் கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஒஸ்றியாவின் Odelga Med G.m.b.H நிறுவனத்திடமிருந்து விரிவான பிரேரிப்பொன்றை கோருவதற்கும் இதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஒஸ்றியாவின் Unicredit வங்கியுடன் கலந்துரையாடுவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.