• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' வட்டி சலுகை கடன் திட்டத்தினை செயற்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்
– 2017 மற்றும் 2018 வரவுசெலவு திட்டங்களுக்கு அமைவாக அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள், வௌிநாட்டு நிதி ஒத்துழைப்பு நிறுவனங்களுடன் இணைந்து மற்றும் ஏனைய பங்களிப்பு நிறுவனங்களின் பங்களிப்புடன் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப் படுத்தப்படும். இலங்கையர்களிடம் இயற்கையாகவேயுள்ள தொழில்முயற்சி திறன்களை பயன்படுத்தி தொழில்முயற்சி சொர்க்கமாக இலங்கையை கட்டியெழுப்புவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் கீழ் 11 வட்டி சலுகை திட்டங்கள், 03 மீள் நிதி கடன் திட்டங்கள், 02 நிதி மற்றும் நிதியல்லாத வசதிகளை வழங்கும் திட்டம் அடங்கலாக 16 திட்டங்களின் கீழ் சலுகை வழங்கப்படும். இதற்கமைவாக ஏற்கனவே சுமார் 12,405 தொழில்முயற்சியாளர் களுக்கு 30 பில்லியனுக்கு மேற்பட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு சார்பில் இதன் கீழ் செயற்படுத்தப்படும் கடன் திட்டங்கள் சார்பில் வட்டி சலுகைகளை செலுத்துவதற்கு மாத்திரம் அரசாங்கத்தினால் 5,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் பொருளாதாரத்தில் 60,000 மில்லியன் ரூபாவுக்கு கிட்டிய மூலதனத்தை ஏற்படுத்துவதற்கும் அதேபோன்று 50,000 புதிய தொழில்களை உறுவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் மக்களிடையே பரப்பும் நோக்கிலும் இதன் மூலம் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது உற்பத்திகளை சருவதேச மட்டம் வரை விஸ்தரிப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை செய்யும் எதிர்பார்ப்பிலும் தேசிய மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றாக அரசாங்கத்தின் ஏனைய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து மாகாணங்கள் அனைத்தையும் தழுவும் விதத்தில் 03 மாதங்களுக்கு ஒரு தடவை தேசிய மட்ட கண்காட்சியொன்றை "2025 தொலைநோக்கு" எனும் தொனிபொருளின் கீழ் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் செயலகமொன்றை தாபிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.