• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் பசளை மானியத்தின் கீழ் விநியோகிக்கப்படவுள்ள பசளையினை கொள்வனவு செய்தல் - 2018 யூன்
- விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்டு இரசாயன பசளையானது Ceylon Fertilizer Company Ltd., நிறுவனத்தினாலும் Colombo Commercial Fertilizers Ltd., நிறுவனத்தினாலும் இறக்குமதி செய்யயப்படுகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் தேவைப்படும் பசளையினை விநியோகிக்கும் நோக்குடன், கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு, மெற்றிக் தொன் ஒன்றுக்கு 311.74 ஐக்கிய அமெரிக்க டொலர் படி 6,000 மெற்றிக் தொன்கள் கொண்ட Muriate of Potash பசளையை சிங்கப்பூரின் M/s. Valency International Trading (Pvt.) Ltd., நிறுவனத்திடமிருந்தும் மெற்றிக் தொன் ஒன்றுக்கு 280.90 ஐக்கிய அமெரிக்க டொலர் படி 18,000 மெற்றிக் தொன்கள் கொண்ட யூரியா பசளையை அபுதாபியின் M/s. Agri Commodities & Finance FZE நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.