• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தென் மாகாணத்தில் நிலவும் Influenza தொற்றுநோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள்
- சந்தேகப்படும்படியான Influenza தொற்றைக் கொண்ட அண்ணளவாக 2,000 நோயாளர்கள் கடந்த 02 மாதங்களுக்குள் தென் மாகாணத்தின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியின் போது 11 நோயாளர்கள் மரணமடைந்துள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை சேவைகளை வழங்குதல் மற்றும் நோயாளர்களை தனிமைப்படுத்து வதற்கான இடங்களை அமைத்தல் உள்ளடங்கலாக இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பற்பல நடவடிக்கைகளை சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு எடுத்துள்ளது. ஆதலால், அதிமேதகைய சனாதிபதி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இம் மாகாணத்திலும் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலும் இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டுவதற்காக உரிய வைத்தியசாலைகளுக்கு துரிதமாக வழங்கப்படுவதற்காக மேலதிக மருத்துவ உபகரணங்கள், ஏனைய உபகரணங்கள் மற்றும் வசதிகளை தாமதமின்றி வழங்கும் பொருட்டு பதில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மொஹமட் காசிம் மொஹமட் பைசல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.