• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டம் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகளை பயிற்றுவித்தல்
- வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழிலை வழங்கும் தேவையைக் கருத்திற் கொண்டு, தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள 45 வயதுக்கு கீழுள்ள சகல வேலையற்ற பட்டதாரிகளையும் நேர்முகப் பரீட்சையொன்றுக்கு அழைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 5,000 பட்டதாரிகளை 2018 ஆம் ஆண்டு யூலை மாதத்திலும் 15,000 பட்டதாரிகளை 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்திலும் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தின் போது, அவர்களுக்கு 20,000/- ரூபா கொண்ட மாதாந்த படியொன்று வழங்கப்படும். கட்டம் கட்டமாக 2019 ஆம் ஆண்டில் மீதமுள்ள பட்டதாரிகளை பயிற்றுவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், வேலையற்ற பட்டதாரிகளின் பயிற்சிக்கான நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் பயிற்சியினை நிறைவு செய்பவர்களிலிருந்து, அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கென, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு ஏற்ப தகைமைகளை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.