• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத பாதுகாப்பு கடவை முறைமைகளை வழங்குதல், பொருத்துதல், பரீட்சித்தல் மற்றும் கையாள்தல் தொடர்பிலான கேள்வி
- 25 இரட்டை புகையிரத கடவை பாதுகாப்பு முறைகள் மற்றும் 175 ஒற்றைப்பாதை புகையிரத பாதுகாப்பு கடவை முறைமைகளை பயிற்சியுடன் வழங்குதல், பொருத்துதல், பரீட்சித்தல் மற்றும் கையாள்தல் என்பவற்றுக்கான ஒப்பந்தமானது தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு உடன்பட்டு மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் M/s. N-Able (Pvt) Ltd., நிறுவனத்தையும் M/s. Uni Consultancy Services நிறுவனத்தையும் உள்ளடக்கிய கூட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது. இக்கருத்திட்டத்தின் அமுலாக்கத்தின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளினால் ஏற்பட்ட தாமதத்தைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 12 மாத காலப்பகுதியால் இக்கருத்திட்டத்தின் காலத்தை நீட்டிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.