• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட பிரதேசங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபித்தல்
- புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை பெருந்தோட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பில் தாபிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட, பெருந்தோட்ட பிரதேசங்கள் தொடர்பில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.