• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் மீன்பிடி துறைமுகங்கள் உட்பட கரையோர பிரதேசங்களுக்கான கழிவு முகாமைத்துவம்
- இலங்கையின் மொத்த சனத்தொகையின் சுமார் 30 சதவீதம் கரையோர பிரதேசத்திற்கு அண்மையில் வசிப்பதோடு, கடற்றொழில், சுற்றுலா கைத்தொழில் உள்ளடங்கலாக பிரதான பொருளாதார செயற்பாடுகள் பல இந்த பிரதேசத்தில் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஒன்றுசேரும் கழிவுகளை உரிய முறையில் முகாமிக்காமை காரணமாக சமுத்திர சூழல் மாசடையும் உயர் ஆபத்து உருவாகியுள்ளதோடு, பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் இது கடும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. ஆதலால், இலங்கையில் கரையோர பிரதேசத்தின் கழிவுகளை முகாமை செய்தல் சம்பந்தமான சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கரையோர பிரதேச கழிவு முகாமைத்துவ குழுவொன்றைத் தாபிப்பதற்கும் கரையோர பிரதேசத்தை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக டெங்கு நோய் தடுப்பு சட்டத்திலும் தேசிய சுற்றாடல் சட்டத்திலும் சமுத்திர சூழல் மாசடைதலை தடுக்கும் சட்டத்திலும் உள்ள ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.