• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 40,000 நிரந்தர வீடுகளை நிருமாணித்தல்
- இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மக்களின் வீட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்குகையில் அரசாங்கத்தின் தலையீட்டில் பாரிய அளவிலான வீடமைப்பு கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும். இதன் பொருட்டு 65,000 பொருத்து வீடுகளை நிருமாணிப்பதற்கு இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரிப்பானது சில தரப்பினர்களின் எதிர்ப்பின் மீது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு மாற்று வழியொன்றாக தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கொங்கிறீட் பெனல் தொழினுட்பத்தை பயன்படுத்தி நிருமாணிக்கப்படும் வீடுகளுக்கு இந்த பிரதேசங்களின் மக்களினதும் அதே போன்று அரசியல் பிரதிநிதிகளினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொங்கிறீட் பெனல் தொழினுட்பத்தை பயன்படுத்தி 650 சதுர அடிகள் கொண்ட 40,000 நிரந்தர வீடுகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் நிருமாணிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.