• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் செங்கல் மற்றும் சீமெந்தினால் கட்டப்பட்ட பாரம்பரிய நிரந்தர வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்ட
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்தினால் கட்டப்பட்ட 50,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளது. இதன் பொருட்டு ஒப்பந்தகாரர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதோடு, இதன் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளைவிட ஐக்கிய் நாடுகளின் மனித குடியேற்ற நிகழ்ச்சித்திட்டம் (Un-Habitat), ஐக்கிய நாடுகளின் கருத்திட்ட சேவைகள் பற்றிய அலுவலகம் (UNOPS), இலங்கையில் மனிதநேய இல்லம் (Habitat for Humanity Sri Lanka) மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்பவற்றினால் கையாளப்படும் இலாபத்தினை நோக்காக கொள்ளாத மனிதநேய அமைப்பினால் முன்வைக்கப்பட்ட வீடுகளை நிருமாணிக்கும் 03 மாற்று வழிகளுடனான பிரேரிப்பு மிகப் பயனுள்ளதென அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, முதலாம் கட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இத்தகைய 25,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு இந்த கூட்டு அமைப்பினால் முன்வைக்கப்பட்ட பீரேரிப்புக்கு அமைவாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.