• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனாதிபதி செயலணியின் கீழ் செயற்படுத்தப்படும் ஐந்து (05) நிகழ்ச்சித்திட்டங்களை 'மாதிரி கிராமங்கள்' வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்தல்
- வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக 2020 ஆம் ஆண்டளவில் 2,500 புதிய மாதிரிக் கிராமங்களை ஆரம்பிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டமானது செயற்படுத்தப் பட்டுள்ளதோடு, ஏற்கனவே 700 மாதிரிக் கிராமங்களின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 60 கிராமங்கள் நிருமாணிக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சனாதிபதி செயலணிகளின் கீழ் தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்படும் "சிறுநீரக நோய் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்", "சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்", "போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்" அதேபோன்று "சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்" போன்றவற்றை இந்த மாதிரிக் கிராமங்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை வினைத்திறனுடன் அடையமுடியுமென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த நிகழ்ச்சித்திட்டங்களை 'மாதிரி கிராமங்கள்' வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வளங்களையும் உரிய நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பொருட்டும் தேசிய வழிநடத்தல் குழுவொன்றை தாபிப்பதற்கும் இந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தை 06 மாதங்களுக்கு ஒரு தடவை அமைச்சரவைக்கு அறிக்கையிடுவதற்காகவும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.