• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 சிறு போகத்திலிருந்து உயிரியல் ரீதியான (சேதன) முறைகளைப் பயன்படுத்தி நெல் செய்கைப்பண்ணும் விவசாயிகளுக்கு பசளை மானிய முறையொன்றை அறிமுகப்படுத்துத
- 2016 சிறுபோகத்திலிருந்த நடைமுறைப்படுத்தப்பட்ட பசளை மானியமானது பணமாக செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அவர்களுடைய நெற்செய்கைக்கு இரசாயன பசளை அல்லது சேதன பசளை பயன்படுத்தும் பொருட்டு உரிய மானிய தொகையினை பயன்படுத்தும் ஆற்றல் இருந்தது. ஆயினும் 2018 சிறு போகத்திலிருந்து மீண்டும் இரசாயன பசளை சலுகை விலைக்கு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதோடு, இதன் கீழ் சேதன பசளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு சலுகை கிடைக்கப்பெறவில்லை.

ஆதலால் சேதன பசளை பயன்படுத்தும் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு போகத்திலும் சேதன பசளையை பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளையும் அவ்வாறு பயிர் செய்கை பண்ணப்படும் காணியின் அளவுகளையும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இனங்கண்டு, உரிய மானியத்தினை இந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைப்பதற்கும் இதனை ஒவ்வொரு போகத்திலும் இரசாயன பசளையின் விலை மாற்றத்தின் மீது சீராக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.