• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் தடுப்பு நிலையங்களை கண்காணிப்பது தொடர்பில் சருவதேச செஞ்சிலுவை சங்கத்துடன் புதிய உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- சருவதேச செஞ்சிலுவை சங்கமானது 1989 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்படுவதோடு, உரிய சகல அரசாங்க நிறுவனங்களுடன் தொழில் மட்டத்தில் சிறந்த உறவினை பேணிவருகின்றது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றுக்கு அமைவாக இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்க்கச் செல்வதற்கு இந்த சங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரும் மனிதநேய அடிப்படையில் கவனிக்கப்படுகின்றார்களென்பதை உறுதிப்படுத்துவது இந்த சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக உரிய அதிகாரபீடங்களுக்கு அறியச் செய்விக்கும் மோதல் முடிவுற்றதன் பின்னர் உருவாகியுள்ள சூழ்நிலையில் இலங்கையில் நடாத்திச் செல்லப்படும் தடுப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணிகள் மற்றும் அங்கு செல்தல் சம்பந்தமாக புதிய உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு இந்த சங்கத்தினால் பிரேிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுப்பு நிலையங்களின் நிலைமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கவனிக்கப்படும் விதத்தினை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் சிறைச்சாலைகள் முறைமையை சருதேச தரங்களுக்கு அமைவாக தயாரிக்கும் போது சருவதேச செஞ்சிலுவை சங்கத்திற்குள்ள விரிவான சருவதேச அனுபவம் மற்றும் நிபுணத்துவம் என்பவற்றை இலங்கை பெற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும். இதற்கமைவாக, தங்களுடைய சுதந்திரத்தை இழந்தவர்களின் நன்மை கருதிய ஒத்துழைப்பும் மனிதநேய செயற்பாடுகளும் தொடர்புபட்ட சருவதேச செஞ்சிலுவை சங்கத்துடனான உத்தேச உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.