• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெரிவு செய்யப்பட்ட கைத்தொழில்களுக்கு சுங்கத் தீர்வை செலுத்தா பொருட்குதங்கள் வசதிகளை தாபித்த
- 2018 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக மருந்துப் பொருள் உற்பத்தி கைத்தொழில், பால் சார்ந்த உற்பத்தி கைத்தொழில், திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் புதுபிக்கத்தக்க வலுசக்தி பிறப்பித்தல் தொழில் போன்றவை சார்பில் மூலதன பொருட்களை இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகை வழங்குவதற்கும் சுங்க இசைவாக்கத்தின் போது ஏற்படும் தாமதங்களை தடுப்பதற்குமான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த கைத்தொழில்களைத் தாபிப்பதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கான மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு சலுகை வழங்குவதன் மூலம் இந்த துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, மருந்து உற்பத்தி, பால் சார்ந்த உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் போன்ற கைத்தொழில்களில் புதிய முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கான வசதிகளை செய்வதற்காக சுங்கத் தீர்வை செலுத்தா பொருட்குதங்கள் வசதிகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.