• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிசு சரிய', 'கெமி சரிய', 'நிசி சரிய' பேருந்து சேவைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரித்தல்
- பாடசாலை மாணவர்களுக்காகவும் பல்கலைக்கழகங்கள், தொழினுட்பக் கல்லூரிகள் மற்றும் அதற்கு சமமான வேறு நிறுவனங்களின் மாணவர்களுக்காகவும் சலுகை கட்டணங்களின் மீது பேருந்து பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஏற்பாடு செய்வதுவும், இலாபம் கிடைக்கப் பெறாத கிராமிய பேருந்து பாதைகளில் வசிக்கும் மக்களுக்கு பேருந்து சேவைகளை செய்வதுவும் முறையே 'சிசு சரிய' மற்றும் 'கெமி சரிய' கருத்திட்டங்கள் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரவு இறுதி பயணம் மற்றும் அதிகாலை முதல் பயணம் என்பவற்றின் நம்பத்தகு தன்மையை உறுதி செய்வதற்கு 'நிசி சரிய' கருத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த பயணிகள் பேருந்து சேவைகளை நடைமுறைப்படுத்துவதனை மேலும் ஊக்குவிக்க வேண்டியதோடு, இதற்கமைவாக காலத்திற்கேற்ப செலவுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த பயணிகள் பேருந்து சேவைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.