• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறைக்கு தேவைப்படும் கட்டடங்களை நிருமாணிப்பதற்காக அரசாங்க - தனியார் பங்குடைமை அடிப்படையில் தனியார் முதலீட்டினைப் பெற்றுக் கொள்தல்
- பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் போன்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடங்களை நிருமாணிப்பதற்கு வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கூடுதலான நிதியினை ஒதுக்குவதற்கு அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ளதோடு, இந்த கட்டடங்களை நிருமாணிக்கும் மற்றும் பராமரிக்கும் நோக்கங்களுக்காகவும் காலம் மற்றும் நிதி போன்றவற்றை செலவிடவேண்டியுள்ளது. ஆதலால், அரசாங்கத்தின் நிதிகளை ஏனைய முன்னுரிமை நோக்கங்களுக்காக செலவுசெய்யக்கூடிய விதத்தில் அரசாங்க கட்டடங்களை நிருமாணிப்பதற்கு தனியார் துறையின் முதலீடுகளை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி போன்ற துறைகள் சார்ந்த அரசாங்க கட்டடங்களை நிருமாணிப்பதற்கு அரசாங்க - தனியார் பங்குடமை வழிமுறையினை பயன்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்போது உரிய அரசாங்க நிறுவனங்கள் சார்பில் அரசாங்க காணியொன்றில் தனியார் முதலீட்டாளர் ஒருவரினால் கட்டடம் நிருமாணிக்கப்படுவதோடு, 15 தொடக்கம் 20 வருடங்கள் கொண்ட சலுகை காலத்தின் பின்னர் இந்த கட்டடாமனது அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளப்படும். அதுவரையிலான காலப்பகுதியில் கட்டடங்களின் பராமரிப்பு பணிகளை அரசாங்க - தனியார் பங்குடைமை அடிப்படையில் செய்யப்படுவதோடு, தனியார் முதலீட்டாளருக்கு கட்டடம் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தவணைக் கொடுப்பனவு அரசாங்கத்தினால் செய்யப்படும். இதற்கமைவாக, இந்த வழிமுறையின் கீழ் மேற்குறிப்பிட்ட துறைகளுக்குரியதாக அரசாங்கத்திற்கு தேவையான கட்டங்களை நிருமாணிப்பதற்கு தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளை கோருவதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.