• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை முருகைக் கற்கள் தொடர்பான சருவதேச நிகழ்ச்சித்திட்டத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள
- உயிரினப் பல்வகைமை சுற்றாடல் முறைமையொன்றான அயன மண்டல முருகைக் கற்கள் உள்ள நாடுகளில் இலங்கை முக்கியமானதாகும். 193 இற்கும் மேற்பட்ட கடின முருகைக் கற்கள் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் உள்ளதோடு, இந்த முருகைக் கற்கள் சார்ந்த 900 இற்கும் மேற்பட்ட கரையோர மீன் விசேட வகைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடற்றொழில், சுற்றுலா மற்றும் வளர்ப்பு மீன் கைத்தொழில் என்பன சார்பில் பொருளாதார ரீதியில் பங்களிப்பு நல்குவதோடு, கடலரிப்பினைக் குறைத்தல், நீர்சுழி போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கரையோரத்தைப் பாதுகாத்தல் போன்ற சுற்றாடல் பங்களிப்பும் இந்த முருகைக் கற்கள் மூலம் வழங்கப்படுகின்றது. தற்போது மனித செயற்பாடுகள் அதேபோன்று புயல், சுனாமி போன்ற இயற்கை நிலைமைகள் காரணமாகவும் முருகைக் கற்கள் சேதத்திற்கு உள்ளாகின்றமை போன்ற கடும் ஆபத்து எழுந்துள்ளன.

முருகைக் கற்கள் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் செயலாற்றும் சருவதேச அமைப்பொன்றான முருகைக் கற்கள் தொடர்பான சருவதேச நிகழ்ச்சித்திட்டத்தில் (International Coral Reef Initiative) உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் முருகைக் கற்களைப் பாதுகாப்பதற்கு சருவதேச பங்களிப்பின் நலன்களை மேலும் பெற்றுக் கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சருவதேச முருகைக் கற்கள் நிகழ்ச்சித்திட்டத்தில் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.