• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரமழான் உற்சவ காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்கு விநியோகிப்பதற்குத் தேவையான பேரீச்சம் பழங்களை கொள்வனவு செய்தல்
- இஸ்லாமியர்களினால் நோன்பு துறப்பதற்காக பேரீச்சம்பழத்தினைப் பயன்படுத்துவது மத ரீதியான வழக்கமாகக் கொள்ளப் பட்டுள்ளது. ஆதலால், ரமழான் காலப்பகுதியில் இஸ்லாமியர்களின் பாவனைக்காக தேவையான பேரீச்சம் பழம் பொதுவாக சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடையாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும். ஆயினும், இந்த ஆண்டில் சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேரீச்சம் பழம் வழங்கப்படாததோடு, மூன்று தனிப்பட்ட நன்கொடையாளர்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 03 மெற்றிக் தொன் பேரீச்சம் பழம் மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆதலால், முக்கியமாக பொருளாதார வசதிகளற்ற முஸ்லிம் குடும்பங்களை மையமாகக் கொண்டு பள்ளிவாசல்கள் ஊடாக இஸ்லாமியர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கும் பொருட்டு ரமழான் காலத்தில் தேவைப்படும் மேலதிக 250 மெற்றிக் தொன் பேரீச்சம் பழத்தினை கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்தின் (சதொச) ஊடாக கொள்வனவு செய்யும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.