• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்காசிய தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (South Asian Institute of Technology and Medicine - SAITM) மருத்துவ கல்லூரி மாணவர்களின் கற்கை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்தல்
- தெற்காசிய தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (South Asian Institute of Technology and Medicine - SAITM) மருத்துவ மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேர்ப்பது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைவாக வழிமுறையொன்றை நடைமுறைப் படுத்தும் பொருட்டு 2018‑03‑06 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்ட வழிமுறையினை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள சட்ட மற்றும் நடைமுறை பிரச்சினைகள் சம்பந்தமாக 2018‑05‑09 ஆம் திகதியன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையிலும் 2018‑05‑10 ஆம் திகதியன்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் பங்குபற்றுதலுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்பட்டவாறு SAITM நிறுவனத்தின் மருத்துவ மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு சேர்ப்பது சம்பந்தமாக பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* 2009 செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 2017 மே மாதம் 15 ஆம் திகதி வரை மருத்துவ கல்வியினை கற்பதற்கு SAITM நிறுவனத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களிலிருந்து அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கும் அடிப்படைத் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள மாணவர்களை மாத்திரம் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேர்ப்பதற்கும்.
* இந்த மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேர்ப்பது சம்பந்தமான தேவை மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிப்பதற்கு இந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ சபைக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்கும்.
* சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்க்கப்படும் SAITM நிறுவனத்தின் மாணவர்களிலிருந்து சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உரிய பரீட்சைகளில் சித்தியடையும் மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டத்தை வழங்குவதற்கும்.