• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை, கதுறுவெலை புலதிசி வர்த்தக கட்டடத்தொகுதியையும் கமத்தொழில் பொருளாதார மத்திய நிலையத்தையும் தாபித்தல்
- பொலன்நறுவை விவசாயிகளின் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும் பிரதேசவாழ் மக்களுக்கு இந்த உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை செய்யும் பொருட்டு 8 ஏக்கர் பிரதேசத்தில் 58 வர்த்தக நிலையங்களுடன் கூடிய வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்றை 'எழுச்சிபெறச் செய்வோம் பொலன்நறுவை' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் பொருளாதார நிலையம், திறந்த சிற்றுண்டிச்சாலை, சிறுவர் பூங்கா, வாகனத் தரிப்பிடம் மற்றும் ஏனைய பொது வசதிகளுடனான இந்த வர்த்தக கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை 623.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.