• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் உதவிக் கிடைக்கப்பெறாத 13 தனியார் பாடசாலைகளுக்கு உதவி வழங்குதல்
- நகரமயப்படுத்தல் மற்றும் சனத்தொகை அதிகரிப்பு என்பன காரணமாக இலங்கையில் தேசிய மற்றும் மாகாண பாடசலைகளுக்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதில் பாரிய போட்டி நிலவுகின்றதோடு, அரசாங்கம் தலையிட்டு கல்வி வாய்ப்புகளை விஸ்தரிப்பதன் மூலம் இந்த சமூகப் பிரச்சினையை தீர்க்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் தேசிய பாடத்திட்டம் செயற்படுத்தப்படும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் தரம் மிக்க கல்வியினை உறுதிப்படுத்த முடியுமாவதோடு, பெற்றோர்களுக்கு குழந்தைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு நம்பத்தகுந்த மாற்று வழியொன்று இதன் மூலம் உருவாக்கப்படும்.

தற்போது கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டதுமான 80 தனியார் பாடசாலைகள் உள்ளதோடு, இந்த சகல பாடசாலைகளுக்கும் பாடசாலை சீருடைகள், பாடப்புத்தகங்கள் போன்ற நலன்கள் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும். இவற்றுள் 36 பாடசாலைகளுக்கு ஆசிரியர்களின் சம்பளத்தை ஏற்பதற்காகவும் அரசாங்கத்தினால் உதவி வழங்கப்படுகின்றது. இந்த உதவிகளை மேலும் விரிவுபடுத்தி கல்வி அமைச்சின் தகவு திறன்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரம் மிக்க போட்டிகரமான கல்வியினை வழங்கும் ஆற்றல் கொண்ட தற்போது அரசாங்கத்தின் உதவி கிடைக்கப் பெறாத 13 பாடசாலைகளை அரசாங்கத்தின் உதவி கிடைக்கப்பெறும் பாடசாலைகளாக கருதி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.