• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை வௌிவாரி ஆட்களுக்கும் நிறுவனங்களுக்கும் குத்தகை அடிப்படையில் பராதீனப்படுத்தல்
- காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை வர்த்தக மற்றும் கமத்தொழில் நோக்கங்களுக்காக பராதீனப்படுத்துவதற்கு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக உரிய அமைச்சரின் அங்கீகாரத்தின் மீது மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆயினும், மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய சகல சந்தர்ப்பங்களிலும் இதன் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ள வேண்டுமென 2011 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை தெரிவு செய்யும் போது வௌிப்படைத் தன்மையில் சரியானவர்களை தெரிவு செய்யும் வழிமுறையொன்றை செய்வதற்கு உட்பட்டு, சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றின் சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு ஆகக்கூடுதலாக 5 ஏக்கர்கள் வரையிலான காணியை பராதீனப்படுத்துவதற்கு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழு என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் மேற்கொள்ளலாமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.