• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை இலங்கை சமூக சேவைகள் கல்லூரியாக பெயர் மாற்றஞ் செய்தல்
- சமூக பணிகள் சம்பந்தமான கல்வியினை வழங்கும் இலங்கையில் உள்ள ஒரேயொரு அரசாங்க நிறுவனம் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமாகும். 1952 ஆம் ஆண்டில் 'சமூக பணிகள் பயிற்சி நிறுவனம்' என்னும் பெயரில் தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயர் பின்பு இலங்கை சமூக சேவைகள் கல்லூரியாகவும் ஶ்ரீலங்கா சமூக சேவைகள் கல்லூரியாகவும் மாற்றஞ் செய்யப்பட்டது. 1992 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தேசிய சமூக சேவைகள் அபிவிருத்தி நிறுவனம் என்னும் பெயரில் உயர்கல்வி நிறுவனமொன்றாக இந்த நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சமூகப் பணிகள் பற்றியும் அதேபோன்று ஆலோசனைகள், சிறுவர் பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு, சமூகம்சார் சீர்திருத்தம், மோதல் முகாமிப்பு, தலைமைத்துவம், தொடர்பாடல் திறன்கள், கருத்திட்ட முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட விடயங்களுக்கு உரியதான உயர்கல்வி பாடநெறிகள் இந்த நிறுவனத்தினால் செயற்படுத்தப் படுகின்றது.

பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்விமான்கள் அதேபோன்று சமூக பணிகள் தொடர்பில் பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோரினாலும் இந்த நிறுவனத்தின் ஊடாக நடாத்திச் செல்லப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் அரசாங்க மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் அதேபோன்று பொதுமக்களுக்கிடையே கொண்டு செல்லும் போது 'தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்' என்னும் பெயரை விட 'இலங்கை சமூக சேவைகள் கல்லூரி' என்னும் பெயர் தொழில் ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தொன்றாகுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 'தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்' என்னும் பெயரை மாற்றி 'இலங்கை சமூக சேவைகள் கல்லூரி' என்னும் பெயரில் இந்த நிறுவனத்தை மீளப் பெயரிடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.