• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பிக்கு பல்கலைக்கழக சட்டத்தை திருத்துத
- பௌத்த தர்மத்தின் மேம்பாட்டின் பொருட்டு பிக்குமார்களை அறிவுசார் ரீதியில் பலப்படுத்துவதற்காக தாபிக்கப்பட்ட இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் தற்போது இலங்கை உயர்கல்வி துறையில் முக்கிய பணியினை நிறைவேற்றி வருகின்றது. பிக்குமார்கள் மாத்திரமன்றி பொதுமக்களுக்கிடையேயும் பௌத்த கல்வி சம்பந்தமாக தற்போது நிலவும் பெருமளவிலான ஊக்கத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பிக்குமார் அல்லாத மாணவர்களுக்கும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகளை கற்பதற்கு வாய்ப்பு வழங்குவது அடங்கலாக காலத்தின் தேவைக்கேற்ப முக்கிய திருத்தங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி இந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டுள்ள 1996 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க புத்த சிராவக்க பிக்குமார் பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது இது தொடர்பில் தற்போதைய உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.