• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பார்வை குறைபாடுடைய அல்லது ஏதேனும் குறைபாடுகள் காரணமாக அச்சு ஊடகங்களை பார்வையிட முடியாதவர்களுக்கு (Print disabled) அச்சு ஊடகங்களை மீள பதிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் இயலுமாகும் வகையில் பதிப்புரிமை (Copy Right) விலக்களிப்பினை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
- அச்சு ஊடகங்களை பார்வையிட முடியாத குறைபாடுடையவர்களுக்கு வௌிப்படுத்தப்பட்ட நூல்களை பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் அவற்றை மீள பதிப்பதற்கும் விநியோகிப்பதற்குமான பதிப்புரிமை சம்பந்தமாக விதித்துரைக்கப்பட்டுள்ள வரையறைகளை தளர்த்தும் பொருட்டு விலக்களிப்புகளை அறிமுகப்படுத்து வதற்காக உலக புலமைச் சொத்துக்கள் அமைப்பினால் நிருவகிகப்படும் 'Marrakesh உடன்படிக்கை' மூலம் உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் Marrakesh உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கு முன்னர் தற்போது பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் இது சார்ந்த விலக்களிப்புகளை உள்வாங்கி 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துவதற்கு 2016 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக வரையப்பட்டுள்ள 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.