• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் அவசர விமான மற்றும் தொழினுட்ப மீட்பு முறைமை யொன்றை நடைமுறைப்படுத்தும் கருத்திட்ட
- திடீர் விபத்தொன்று இடம்பெறும்போது அந்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சிகிச்சையின் பொருட்டு மிக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பாதிக்கப்பட்ட ஆட்களை விமானம் மூலம் இடம் நகர்த்துவதற்கு துரிதமாக செயல் கவனிப்பை முன்னெடுக்கும் இலங்கையில் அவசர விமான மற்றும் தொழினுட்ப மீட்பு முறைமையொன்றை தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. Bijorn Steiger Stiftung என அறியப்படும் ஜேர்மனியிலுள்ள இலாப நோக்கற்ற அமைப்பொன்றினால் முன்வைக்கப்பட்ட, இந்தக் கருத்திட்ட பிரேரிப்புக்கு இணங்க, அவசர நிலைமையொன்றின்போது 8 உலங்கு வானூர்திகளுடனும் 25 தொழினுட்ப மீட்பு வாகனங்களுடனும்கூடிய அவசர மீட்பு முறைமையொன்றின் சேவைகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 190 மில்லியன் ரூபாவென்பதுடன், இத்தொகையானது நீண்டகால மென்கடனொன்றாக வழங்கப்படும். அதற்கிணங்க, உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டம் தொடர்பில் சாத்தியத்தகவாய்வினைச் செய்வதற்கென கருத்திட்ட குழுவொன்றையும் இணக்கப்பேச்சுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.