• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டம் கட்டமாக தொற்றாநோய்களின் இடர் காரணிகளை இனங்காண்பதற்கான தேசிய கணக்கெடுப்பு
– தொற்றாநோய்களின் பரவலை நிர்ணயிப்பதற்கும் தொற்றாநோய்களின் இருப்பினை தீர்மானித்து தடுத்து கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கும் அவசியமான தரவுகளை சேகரிக்கும் குறிக்கோளுடன் தொற்றாநோய்களுக்கு பங்களிப்புச் செய்யும் இடர் காரணிகளை கட்டம்கட்டமாக இனங்காண்பதற்கென தேசிய கணக்கெடுப்பு (STEPS) நடாத்தப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு 05 வருடங்களுக்கும் ஒருமுறை இத்தேசிய கணக்கெடுப்பு நடாத்தப்படுவதுடன் 2018 ஆம் ஆண்டில் இதனை மீண்டும் ஒருமுறை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அதங்கிணங்க, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 50 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய கணக்கெடுப்பு STEPS ஐ நடாத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.