• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தல்
– இலங்கையில் நிதிப் புலனாய்வு அலகானது நிதி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது அத்துடன் தேசிய வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான கொள்கையின் அறிமுகத்துடன், வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவாக அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொழினுட்ப அபிவிருத்தியுடன் நிதி குற்றங்கள் நாளுக்கு நாள் சிக்கல் தன்மை கொண்டதாக மாறிவருவதுடன் அவற்றை வெற்றிகரமாக முகங்கொள்வதற்கு பல்வேறுபட்ட அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல் அத்தியாவசியமான காரணியாக மாறியுள்ளது. அதற்கிணங்க, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம், கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துகைகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதேபோன்று பாதுகாப்பு அமைச்சினதும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்குவதற்காக வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் உள்ளடக்கத்தை விரிவாக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.