• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார், மடு தேவாலயத்திற்கு சமீபமாக குறைந்த செலவிலான 300 வீட்டு அலகுகளை நிருமாணித்தல்
– இலங்கையிலுள்ள புனிதப் பிரதேசங்களில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயமானது உன்னதமிக்க இடமொன்றாகும் என்பதுடன், இது உள்நாட்டு, வெளிநாட்டு கத்தோலிக்க பக்தர்களும் அதேபோன்று ஏனைய பக்தர்களும் வழிபடுவதும் போற்றுவதுமான இடமொன்றாகும்.

திருவிழாக் காலங்களில் காணப்படும் தங்குமிட வசதிகளின் பற்றாக்குறையினை கவனத்திற்கு கொண்டு, மடு தேவாலயத்திற்கு வருகைதரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பக்தர்களினதும் பாவனை கருதி 300 வீடமைப்பு அலகுகளை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இவ்வீடமைப்பு கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான 300 மில்லியன் ரூபா கொண்ட நிதி அனுசரணையினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, இந்நிதியுதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.