• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மருத்துவபீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான நிதியங்களைப் பெற்றுக் கொள்தல்
– பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுகாதார பாதுகாப்பு நிலைமையின் தரம் அதிகமாகும். இலங்கையிலுள்ள இலவச கல்வி முறைமை மற்றும் இலவச சுகாதார சேவைகள் என்பன இச்சூழ்நிலைக்கு பெரிதும் வித்திட்டதுள்ளதுடன் அரசாங்கத்தின் இலக்கானது உயர் தரம் வாய்ந்த இலவச சுகாதார மற்றும் கல்வியினை வழங்குவதாக உள்ளது. இச்சூழமைவில் ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மருத்துவபீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. இந்நோக்கத்திற்குத் தேவையான செலவினத்தை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு 4.9 மில்லியன் யூரோ கொண்ட கடனொன்றை வழங்குவதற்கு The UniCredit Bank of Austria, நிறுவனம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, உரிய கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.