• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனங்களை / உபகரணங்களை வழங்குதல்
– சனத்தொகை அதிகரிப்பு மற்றும் கிடைக்கக்கூடியதாகவுள்ள வரையறுக்கப்பட்ட காணி இடவசதி காரணமாக பல்மாடிகளுடன்கூடிய கட்டடத் தொகுதிகள் கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன. இவ் ஆதனங்களினதும் இக்கட்டடங்களில் வசிப்பவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் ஆற்றலை அதிகரிக்கும் குறிக்கோளுடன் தீயணைப்பு உபகரணங்களையும் வாகனங்களையும் வழங்குவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இந்நோக்கத்திற்கு அவசியமான நிதியங்களைப் பெற்றுக் கொள்வதற்கு 10.5 மில்லியன் யூரோ கொண்ட வட்டியற்ற கடனொன்றை வழங்குவதற்கு The UniCredit Bank of Austria நிறுவனம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, இக்கடனைப் பெற்றுக் கொள்வதற்கும் கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் இணக்கப் பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.