• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவித்தல்
- மோதல் நிலவிய காலப்பகுதியில் முப்படையினரினால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக தொடர்ந்தும் தேவைப்படாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 4,992.84 ஏக்கர் தனியார் மற்றும் அரசாங்க காணிகளை பாதுகாப்பு அமைச்சினதும் உடன்பாட்டுடன் ஏற்கனவே அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களிலும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இடையூறுகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவ தற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 522 ஏக்கர் தனியார் காணிகளை மேலும் விடுவிப்பதற்கு இலங்கை தரைப்படை உடன்பாடு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, இந்த தனியார் காணிகளை விடுவிக்கும் போது அவற்றில் தாபிக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களில் மீண்டும் தாபிப்பதற்கு செலவாகும் 866.71 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை இலங்கை தரைப்படைக்கு வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.