• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனிய பழைய புகையிரத பாலத்தினை நிருமாணித்தல்
- அதிகரித்து வரும் புகையிரத பயணிகளின் எண்ணிக்கை மற்றும் புகையிரதங்களின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கும் தேவை என்பவற்றுக்கு ஏற்றவிதத்தில் புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் தேவையானது அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. இதன்கீழ் 1881 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்ட களனிய பழைய புகையிரத பாலத்தினை தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மீண்டும் நிருமாணிக்கும் கருத்திட்டமானது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு சுமார் 9 மில்லியன் யூரோக்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மொத்த செலவினை ஏற்பதற்கு வட்டியற்ற கடன்தொகையொன்றை வழங்குவதற்கு ஒஸ்றியாவின் UniCredit Bank Austria AG வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது இதற்கமைவாக, குறித்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த வங்கியுடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் உரிய கடன் உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.